IPL2020: 'கப் அடிச்சு' வருஷம் ஆச்சு.. அதனால இந்த '3 பேரை'.. பிரபல அணியின் 'பலே' திட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 24, 2019 04:51 PM

2020 ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றது. இதனையொட்டி பல்வேறு அணிகளும் பலத்த திட்டங்களை தீட்டி வருகின்றன. அந்த வகையில் பிரெண்டன் மெக்கல்லமை பயிற்சியாளராக பெற்று இருக்கும் கொல்கத்தா அணியும் கோதாவில் குதித்து செம பிளான்களை செய்து வருகிறது.

IPL 2020: 3 players KKR could target at the auction

குறிப்பாக கப் ஜெயித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இந்த வருடம் கண்டிப்பாக கப் ஜெயிக்க முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் கொல்கத்தா அணி இந்த வருட ஏலத்தில் யாரை குறிவைக்கும்? என்று இங்கே பார்க்கலாம்.

ஜேம்ஸ் நீசம்

கடந்த ஆண்டு ஏலத்தில் இவரின் அடிப்படை விலை 75 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. எனினும் உலகக்கோப்பை நடந்து முடிந்தபின் இவரின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நியூசிலாந்து அணி உலகக்கோப்பை வரை செல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இவரது ஆக்ரோஷம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இதனால் சக நாட்டு  வீரர் என்ற முறையில் மெக்கல்லம் இவரை ஏலத்தில் எடுக்க அதிக முனைப்பு காட்டலாம்.

மேக்ஸ் பிரையண்ட்

20 வயதான இந்த ஆஸ்திரலிய ஆட்டக்காரர் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் இவர் களம் காணவில்லை இதனால் இந்த வருட ஏலத்தில் இவரை எடுக்க கொல்கத்தா ஆர்வம் காட்டலாம். இவருடன் இணைந்து விளையாடி இருப்பதால் மெக்கல்லம் இவரை வளைத்துப்போட விரும்புவார். கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி சரியாக விளையாடவில்லை என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

இயான் மோர்கன்

உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்ற முறையில் இந்த வருடம் ஏலத்தில் மிகவும் விரும்பப்படும் நபராக இயான் மோர்கன் இருப்பார். மெக்கல்லம்-மோர்கன் இடையே ஒரு சிறந்த நட்பு இருக்கிறது. எனவே இந்த வருடம் இவரை ஏலத்தில் எடுத்து கோப்பையை வெல்வதே கொல்கத்தா அணியின் திட்டமாக இருக்கும். ஒருவேளை ஏலத்தில் இவரை எடுக்கும் பட்சத்தில் அணியை இவர் வழிநடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Tags : #IPL #CRICKET