VIDEO : 'ஆர்ப்பரிக்கும்' போராட்டக் களத்திற்கு நடுவே மலர்ந்த 'காதல்',,.. திக்கு முக்காடிப் போன 'பெண்',,.. ஆரவாரம் பண்ணி 'வாழ்த்து' சொன்ன 'போராட்டக்காரர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பெலாரஸ் என்னும் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 6 - வது முறையாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்றும், உடனடியாக அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, பெலாரஸின் தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவரிடம், மற்றொரு போராட்டக்காரர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பெண் உட்பட அங்கிருந்த போராட்டக்காரார்கள் அனைவரும் அந்த நபரின் செயலை எதிர்பார்க்கவில்லை.
பெண்ணின் முன்பு மண்டியிட்டு தனது காதலை அந்த நபர் வெளிப்படுத்தவே, அந்த பெண் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார். அந்த பெண்ணும் காதலை ஏற்றுக் கொள்ள, அங்கிருந்தவர்கள் ஒன்றாக இணைந்து ஆரவாரம் செய்து காதல் ஜோடியை உற்சாகப்படுத்தினர். போராட்டக் களத்தில் மலர்ந்த காதலுக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
