‘அடுத்த ஆட்டத்துக்கு நாங்க ரெடி’!.. பிசிசிஐ வெளியிட்ட போட்டோ.. ஆச்சரியத்தில் சர்வதேச கிரிக்கெட் அணிகள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதில் நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதவுள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.
இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. வரும் ஜூலை 13-ம் தேதி முதல் நடைபெற உள்ள இந்த போட்டிகள் அனைத்தும், கொழும்பில் உள்ள ப்ரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷன், சக்காரியா, தேவ்தவ் படிக்கல், தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம்வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் அனைவரும் தனி விமானம் மூலம் கொழும்புவிற்கு செல்லவுள்ளனர்.
— BCCI (@BCCI) June 15, 2021
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம்வீரர்கள் பலரும், தங்களது முதல் சர்வதேச கிரிக்கெட்டை எதிர் நோக்கி காத்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணியைப் பார்த்து உலக கிரிக்கெட் அணிகள் ஆச்சரியத்தில் உள்ளன.

மற்ற செய்திகள்
