'இந்தியா-நியூசிலாந்து போட்டி'... 'முதல் பந்திலேயே பரபரப்பு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 09, 2019 05:08 PM
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி முதல் பந்திலேயே ரிவ்யூ வாய்ப்பை இழந்தது.
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான குப்தில் முதல் பந்தை எதிர்கொண்டபோது, அது அவர் காலில் பந்து பட்டது. இதனால் புவனேஸ்வர் உள்பட இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டார்கள். ஆனால் நடுவர் மறுத்துவிட்டார். இதையடுத்து கேப்டன் கோலி டி.ஆர்.எஸ். கோரினார். பந்து பேட்டில் படவில்லையென்றாலும் லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது. இதனால் நாட் அவுட் என வர இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்த்திலேயே ரிவ்யூவை இழந்தது.