VIDEO: கேட்சை 'கோட்டை' விட்ட கேப்டன்... பாய்ந்து வந்து 'பிடித்த' இளம்வீரர்... யாருன்னு தெரிஞ்சா 'ஷாக்' கன்பார்ம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து-இந்தியா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையே மேட்ச் டிரா ஆனதால், போட்டி சூப்பர் ஓவருக்கு போனது. இதில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக நியூசிலாந்து தொடக்க வீரர்கள் குப்தில், காலின் முன்ரோ இருவரும் பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பவர்பிளே ஓவரில் குப்தில் கொடுத்த கேட்சை கே.எல்.ராகுல், விராட் கோலி இருவரும் தவற விட்டனர்.
That was a stunner from @IamSanjuSamson ❤️#INDvsNZ #SuperOver #SanjuSamson pic.twitter.com/4GTmUcd71b
— Sreejith Suresh (@SreejithSuresh) January 29, 2020
இதையடுத்து 6-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். 4-வது பந்தை எதிர்கொண்ட குப்தில் பந்தை தூக்கியடிக்க சஞ்சு சாம்சன் ஓடிவந்து அந்த கேட்சை அற்புதமாக பாய்ந்து பிடித்து குப்திலை(31) வெளியேற்றினார். சஞ்சு சாம்சனின் இந்த கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஒருவேளை குப்தில் நிலைத்து நின்றிருந்தால் கண்டிப்பாக நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார்.
இதேபோல 7-வது ஓவரை வீசிய ஜடேஜா 2-வது பந்தில் காலின் முன்ரோவை(14) ஸ்டம்ப்டு அவுட் முறையில் வெளியேற்றினார்.ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரது விக்கெட்டும் அடுத்தடுத்து விழுந்ததால் இந்திய ரசிகர்கள் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று நம்பிக்கை கொண்டனர். கடைசியில் சூப்பர் ஓவர் வரை சென்றாலும் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
