VIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 23, 2020 08:04 PM

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.

Mohammed Siraj sends stumps for walk during INDA v NZA

இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து ஏ அணி 48.3 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் ராசின் ரவீந்திரா 49 ரன்களும், கேப்டன் டாம் புரூஸ் 47 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியைப் பொருத்தவரை முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது, அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர், ராகுல் சாஹர் தல 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் முகமது சிராஜ் வீசிய ஓவரில் நியூஸிலாந்து வீரர்கள் அஜஸ் படேல் மற்றும் ஜாகப் டூஃபி அடுத்தடுத்து போல்ட் ஆகி அவுட்டாகினர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 29.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 48 ரன்களும், சஞ்சு சாம்சன் 39 ரன்களும், கேப்டன் சுப்மன் ஹில் 30 ரன்களும் மற்றும் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும் எடுத்தனர்.

Tags : #CRICKET #MOHAMMEDSIRAJ #INDAVNZA