ரெண்டே ரெண்டு 'ரன்' தான்...! ‘தட்டி தூக்கிய ஜெம்மிசன்...’ 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Feb 21, 2020 09:00 AM

வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்திக்கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

Losing 5 wickets in the first Test cricket match

இந்திய அணியிலிருந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக மயங்க் அகர்வாலும் பிரித்வி ஷாவும் களமிறக்கப்பட்டனர். ஆட்டத்தில் முதலில் வெறிகொண்டு பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பிய பிரித்திவி ஷா, பின் கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கவே 16 ரங்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைவர் வெறிகொண்டெழுந்த விராட் கோலி மற்றும் இந்திய அணியில் தூணாக கருதப்படும் புஜாரா காம்பினேஷன் சிறுது நேரம் இந்திய அணியை உயிர்ப்பிக்க வைத்தது. அதை சகிக்க முடியாத நியூஸிலாந்து அணி அவர்களுடைய தத்துக்குட்டியான ஜெம்மிசனை அனுப்பி 16வது ஓவரில் புஜாராவை வீழ்த்தியது. ஜெம்மிசன் எடுத்த முதல் விக்கெட் புஜாராவுடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெம்மிசனின் பந்துவீச்சால் கேட்ச் கொடுத்து நமது கோலியும் ரெண்டே ரெண்டு ரன்களில் அவுட் ஆகி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்.

உணவு இடைவெளி வரும் வரை இந்தியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. அதை அடுத்து  மயங்க் அகர்வாலும் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானேவும் மீண்டும் இந்திய அணியை மேலே தூக்க போராடிவந்தாலும் மயங்க் சிறுது நேரத்தில் ஆட்டமிழந்தார்.

தற்போது122 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறிக்கொண்டிருக்கும் இந்தியாவை ரஹானேவும் (38), ரிஷப் பண்ட்டும் (10) களத்தில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நியூசிலாந்தின் பவுலிங்கை கண்டு அனைவரும் மிரண்டுப் போய் உள்ளனர்.

Tags : #CRICKET #INDVZNZ