'எல்லாம் ஓகே... ஆனா இது மட்டும் தப்பா இருக்கு!'.. பாண்டியாவின் அந்த ஒரு மைனஸ்!.. சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டருக்கான உடல் அமைப்பு குறித்து தற்போது விவாதம் கிளம்பியுள்ளது. அந்த வகையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பாண்டியா குறித்து சல்மான் பட் ஓப்பனாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சல்மான் பட், "ஹர்திக் பாண்டியா மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது இந்திய அணி. ஆனால் கடந்த பல மாதங்களாக அவர் விடுப்பில் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அவர் பேட்டிங் செய்யும்போது மிகவும் திறமையானவராக தெரிகிறார். காயமடைவதற்கு முன்பாக அவருடைய பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. ஆனால், பாண்டியாவின் பிரச்சினை என்னவெனில் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் எடையை கூட்ட வேண்டும். ஓல்லியாக இருப்பதால்தான் அடிக்கடி அவருக்கு காயம் ஏற்படுகிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "அவர் அபார திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அற்புதமான பேட்டிங் திறமை, அழகான பவுலிங் ஆக்ஷன் என அனைத்துமே பிரமாதம். என்ன அவர் உடலால் அதிக அழுத்தத்தை தாங்க முடிவதில்லை.
அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் உடலை எடையை கூட்ட வேண்டும். அதனை அவர் சரி செய்துகொள்வார் என நினைக்கிறேன். மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களான கபில் தேவ், இம்ரான் கான் ஆகியோரிடம் ஒப்பிட்டால் பாண்ட்யாவிடம் போதிய உடற்தகுதி இல்லை" என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
