தாலிபான்களுக்கு கிரிக்கெட் புடிக்குமா?.. புடிக்காதா?.. ரஷீத் கான் போன்ற திறமையான வீரர்களின் எதிர்காலம் என்ன?.. ஏக்கத்தில் கிரிக்கெட் உலகம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களின் ஆட்சி கொடுமையானதாக இருக்குமென எண்ணி, ஆப்கானிய மக்கள் பிற நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக அகதிகளாக செல்கின்றனர்.
தாலிபான்கள் பொழுதுபோக்கு அம்சங்களையும், கொண்டாட்டங்களையும் தீவிரமாக எதிர்ப்பவர்கள். இதனாலேயே அங்கிருக்கும் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரும் கவலையில் உறைந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று பிரிமியர் போட்டிகளில் விளையாடக்கூடிய அளவுக்கு வளர்ந்து உள்ள நிலையில், தற்போது தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் அந்நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தாலிபான்களுக்கு கிரிக்கெட் விருப்பமான விளையாட்டு என்றும், அவர்கள் கிரிக்கெட்டை நேசிப்பதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் கமிட்டி செயல் தலைவர் ஹமித் சின்வாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.