‘பயமா இருக்கு’.. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தம்.. திடீரென நிறுத்திய ‘பிக்பாஸ்’ பிரபலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த நிச்சயதார்த்ததை பிக்பாஸ் பிரபலம் நிறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே நடந்து வந்த போர், கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றனர். இதனால் அந்நாட்டு மக்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனை தாலிபான்கள் நியமித்துள்ளனர். தாலிபான்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது என சொல்லப்படும் நிலையில், முதல் நியமனமாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனை நியமித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நடக்க திருமண நிச்சயதார்த்தத்தை அர்ஷி கான் என்ற பாலிவுட் நடிகை நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜீ நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘எனக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. ஆனால் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், இந்த முடிவை நாங்கள் நிறுத்திவிட்டோம். எங்களுக்கு பயமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார். ஆனால் யார் அந்த கிரிக்கெட் வீரர் என அவர் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து பேசிய அர்ஷி கான், ‘அந்த கிரிக்கெட் வீரர் என் தந்தையின் நண்பரது மகன். நாங்கள் நட்பு ரீதியாகதான் இந்த திருமணத்தை பற்றி பேசினோம். ஆனால் தற்போது கண்டிப்பாக இந்தியாவை சேர்ந்த ஒருவரைதான் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.
அர்ஷி கானின் பூர்வீகம் ஆப்கானிஸ்தான் என்றும், தான் 5 வயதாக இருந்தபோது இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததாக அர்ஷி கான் தெரிவித்துள்ளார். இவர் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 11 மற்றும் 14-ல் பங்கேற்றுள்ளார். மேலும் சில டிவி தொடர்களிலும், வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
