VIDEO: 'டிசிஷன் பெண்டிங்...' 'மேட்ச் சீரியஸா போய்கிட்டு இருக்கப்போ...' என்னெல்லாம் நடக்குது பாருங்க...! - டிரென்டிங் ஆகும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது டிசிஷன் பெண்டிங் போர்ட்டில் ஒரு காதல் நிறைவேறியுள்ளது.

ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நேற்று இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரிக்கெட் போட்டி தொடரின் நடுவில் ஒரு காதல் பூத்துள்ளது.
அதாவது கிரிக்கெட் தொடரின் இடையில், ஃபில் என்ற நபர் தன் காதலி ஜில் என்பவரிடம் மண்டியிட்டு தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக்காட்சியை கவனித்த கேமிரா மேனோ மைதானத்தின் பெரிய திரையில் குளோஸ்-அப்பில் பளீரென அனைவருக்கும் காட்டியுள்ளார்.
இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அம்பயர் 'அவுட்', 'நாட் அவுட்' சொல்லும் போர்டில் அப்பெண் சம்மதம் தெரிவிக்கும் வரை 'டிசிஷன் பெண்டிங்' எனக் காட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஜில், ஃபில்லின் காதலுக்கு சம்மதம் சொல்லி, இருவரும் கட்டியணைக்கும் போது பெரிய திரையில் 'she said yes' என்றுக் காட்டப்பட்டதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.
அதன்பின், பாகிஸ்தான் இங்கிலாந்து ஆட்டத்தில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வென்று தொடரை 2-1 என்ற அடிப்படையில் போட்டித் தொடரை கைப்பற்றியது.
Decision Pending... ⏳
She said YES! 💍
Congrats Phil and Jill! ❤️ pic.twitter.com/SHj0iy45Pw
— England Cricket (@englandcricket) July 21, 2021

மற்ற செய்திகள்
