'கெட்டி மேளம் கொட்டியாச்சு'... 'ரெண்டு பேரும் செம CUTE'... 'ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளம் வீரர்'... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் வீரரான சந்தீப் சர்மாவுக்குத் திருமணம் விமரிசையாக நடந்துள்ளது.

இந்திய அணியின் இளம் வீரரான சந்தீப் சர்மாவுக்குத் திருமணம் முடிந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் மூலம் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா, அதன் பின் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் போது சிறப்பாக தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாகக் கொடுத்து வருகிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர் , அந்த அணிக்காக மட்டும் விளையாடிய போது 39 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இளம் வீரரான சந்தீப் விரைவில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு இவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று இவருக்குத் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். சன்ரைசர்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மணமக்களை வாழ்த்தி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், விரைவில் சந்தீப் சர்மா ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A special addition to the #SRHFamily.😍
Congratulations to Mr and Mrs Sharma 🙌🏽
🥂 to a lifelong partnership!#OrangeOrNothing #OrangeArmy pic.twitter.com/gQcLsX9nIL
— SunRisers Hyderabad (@SunRisers) August 20, 2021

மற்ற செய்திகள்
