நடிகையை 'காதலிப்பது' உண்மைதான்... 'நிச்சயதார்த்த' மோதிரத்துடன்... 'புகைப்படம்' வெளியிட்ட இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 01, 2020 06:51 PM
நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த செய்தி உண்மைதான் என்று, இந்திய அணியின் இளம்வீரரும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறுவைசிகிச்சை காரணமாக தற்போது நீண்ட ஓய்வில் இருக்கிறார். இந்தநிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடிகையும், மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிக் உடன் ஸ்டைலாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ''வருடத்தின் முதல்நாளை என்னுடைய வாண வேடிக்கையுடன் தொடங்குகிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
#Cricketer #hardikpandya engaged to Serbian national, Indian actress @KeithStanovich. pic.twitter.com/JEl8zFSreI
— TAPAN THAKAR (@ThakarTapan) January 1, 2020
இன்ஸ்டாவில் வெளியான இந்த புகைப்படம் சுமார் 12 லட்சம் லைக்குகளை குவித்தது. இந்தநிலையில் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில், '' நீ என்னுடையவள். நான் உன்னுடையவன். இதை இந்த உலகமே அறியட்டும்,'' என குறிப்பிட்டு #Engaged என்று ஹேஷ்டாக்கையும் பதிவிட்டு இருக்கிறார்.
தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியா-நடாஷா இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #HardikPandya என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. மறுபுறம் காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து தொடருக்கு முன்பாக நியூசிலாந்து நாட்டிற்கு சென்று, இந்தியா ஏ அணியில் ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்டியா....
