யார் சிறந்த 'கேப்டன்'??... கோலி - ரோஹித் விவகாரத்தில்... மேலும் 'பரபரப்பை' ஏற்படுத்திய கம்பீரின் 'பேச்சு'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.
மும்பை அணி கோப்பையை கைப்பற்றிய ஐந்து முறையும் ரோஹித் ஷர்மாவே அணியை வழி நடத்தியிருந்தார். கடந்த 8 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளார். அவர் மும்பை அணிக்கு கேப்டனான போது தான் விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட ஆரம்பித்தார். ஆனால், இதுவரை ஒருமுறை கூட அவரது தலைமையில் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை.
இதனால், இந்திய டி 20 அணிக்கு விராட் கோலியை மாற்றி விட்டு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பலர் குரல் கொடுத்தனர். ஏற்கனவே ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தேர்வாகாமல் போனது அந்த சமயத்தில் கடும் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், கேப்டன் யார் என கோலி - ரோஹித் குறித்து நடக்கும் விவாதம் இன்னும் பரப்பரப்பை அதிகப்படுத்தியது.
ரோஹித்தை டி 20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய கம்பீர், 'விராட் கோலி மோசமான கேப்டன் இல்லை. ஆனால் ரோஹித் ஷர்மா அவரை விட சிறந்த கேப்டன். அணியை தலைமை தாங்குவதில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்காக பல வீரர்களை ஐபிலஎல் போட்டிகளை அடிப்படையாக வைத்துத் தான் தேர்வு செய்துள்ளனர். ஐபி எல் போட்டியை அடிப்படையாக கொண்டு சர்வதேச அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போது, அணியின் கேப்டனை மட்டும் நாம் ஏன் ஐபிஎல் போட்டிகளைக் கொண்டு தேர்வு செய்யக் கூடாது?.' என கேள்வியை கம்பீர் எழுப்பியுள்ளார்.