"நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்டு!"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாமென நினைத்தது சரியான முடிவுதான் என சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே சொந்த காரணங்கள் காரணமாக சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்தே விலக, கொரோனா நெருக்கடி நேரத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டுமெனக் கூறி சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங்கும் தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
நடந்துமுடிந்த ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு இதுவரை விளையாடிய சீஸன்களிலேயே மிக மோசமானதாக அமைந்தது. சென்னை அணி வீரர்களின் சொதப்பலால் தொடர் தோல்விகளை சந்தித்து அந்த அணி இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்பஜன் சிங்கிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, "கொரோனா நெருக்கடி நேரத்தில் என்னுடைய குடும்பத்தினருடன் இருக்க வேண்டுமென நான் எடுத்த முடிவு சரியானது எனவே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நான்தான்" எனக் கூறியுள்ளார்.
மேலும் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ள அவர், "இந்தாண்டு ஐபிஎல் தொடரில் வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரின் ஆட்டம் என்னை மிகவும் ஈர்த்தது. சமாத் எதிர்காலத்தில் எதிரணிகளுக்கு ஆபத்தான வீரராக இருப்பார். அவருக்கு இருக்கும் திறமைக்கு அவரைச் சரியாக வழி நடத்தினால் மிகச் சிறந்த வீரராக வருவார். வருண் சக்ரவர்த்தியின் பொறுமை பிடித்தது. விக்கெட் எடுத்தபோதும் அதிக உற்சாகத்தைக் காட்டமாட்டார். பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்க முடியாதபடி பந்து வீசும் திறன் அவரிடம் உள்ளது. அதனால்தான் அவரை மர்ம ஸ்பின்னர் எனக் கூறுகிறார்கள்" எனப் பாராட்டி பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
