‘ஒருவேளை அடுத்த வருஷம் இது நடக்கலாம்’.. ‘ஷாக்’ கொடுத்த ரொனால்டோ..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 22, 2019 10:28 AM

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

Football player Cristiano Ronaldo hints at retirement

34 வயதான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ளார் . போர்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோ, அதிக கோல்களை அடித்து பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது இத்தாலியின் ஜூவண்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் ஓய்வு குறித்து ரொனால்டோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ஓய்வு குறித்து தற்போது எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் என்னுடைய கால்பந்தாட்ட வாழ்க்கை முடிவுக்கு வரலாம். ஆனால் 40 அல்லது 41 வயது வரை கூட என்னால் விளையாட முடியும்’ என தெரிவித்துள்ளார். ரொனால்டோவின் இந்த பதிலால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : #CRISTIANORONALDO #FOOTBALL #RETIREMENT #JUVENTUS #CR7