சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் திடீர் ஓய்வு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 31, 2019 12:50 PM
இந்திய கிரிக்கெட் வீரர் வேணு கோபால் ராவ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

37 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் வேணு கோபால் ராவ், ஆந்திர ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இந்திய அணியின் சார்பாக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2005 -ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன் முதலாக இந்திய அணியின் சார்பாக வேணு கோபால் விளையாடினார்.
மேலும் ஐபிஎல் போட்டியில் கடந்த 2008-2014 ஆண்டு வரை டெக்கான் ஜார்ஜெர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் சார்பாக 65 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : #BCCI #VENUGOPAL RAO #RETIREMENT #TEAMINDIA #CRICKET
