அடுத்த 'உலகக்கோப்பை' தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட 'நட்சத்திர வீரருக்கு' தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 24, 2019 05:46 PM
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மீது கால்பந்தாட்ட ஒழுங்கு விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஒரு கால்பந்தாட்ட நட்சத்திர வீரரும் கூட. இவருக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 1500 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்க கால்பந்துபோட்டி நிர்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோப்பா அமெரிக்கா 3-ஆம் ஆட்டத்துக்கான ப்ளே ஆஃப் போட்டியில் சிலிக்கு எதிராக அர்ஜெண்டினா ஆடியிருந்தது. இதில் அர்ஜெண்டினா வென்றது. அதே சமயம் இந்த ஆட்டத்தின்போது, கேரி மெடலுடன் மோதலான போக்கினை கடைபிடித்ததாலும் மெஸ்ஸிக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலிடம் அர்ஜெண்டினா, அரையிறுதியில் தோற்றதால் வெளியேறியது. ஆனால் தென் அமெரிக்க நிர்வாகிகளின் மீதான ஊழல் குற்றச்சாட்டினை வைத்ததால், தனது பதக்கத்தை வாங்குவதற்கு மெஸ்ஸி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மெஸ்ஸி மீதான இந்த ‘ஒரு ஆட்டத்துக்கான’ தடை என்பது 2022-ல் நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கான தகுதிச் சுற்றின்போது அமல்படுத்தப்படும் என தெரிகிறது.