"DK, DK" என தினேஷ் கார்த்திக்கை குறிப்பிட்டு கத்திய ரசிகர்கள்.. "சைலண்டா திரும்பி முரளி விஜய் செய்த சைகை.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரரான தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை, இந்திய அணியில் சில தொடர்களில் இடம் பிடிக்காமல் இருந்து வந்தார்.
Also Read | தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்
தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், தனது பேட்டிங் திறனை நிரூபித்தது மட்டுமில்லாமல், தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்து ஆடி வருகிறார்.
இனிமேல் சர்வதேச போட்டிகளில் களமிறங்க மாட்டார் என எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், தற்போது இந்திய அணிக்காக ஆடி வரும் நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையின் இந்திய அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் பெயரை சொல்லி ரசிகர்கள் கத்திய போது, ஃபீல்டிங் நின்ற முரளி விஜய், அதற்கு கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போலவே, தமிழக வீரர்களை வைத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் (TNPL), தற்போது தமிழகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. தற்போது பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில், பல இளம் வீரர்கள் இடம் பிடித்து, தங்களின் திறனை நிரூபித்து வருகின்றனர். அதே போல, ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய் உள்ளிட்ட சீனியர் வீரர்களும் இந்த TNPL தொடரில் ஆடி வருகின்றனர்.
இதில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விஜய் ஆடி இருந்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 12 சிக்ஸர்களுடன் மொத்தம் 121 ரன்களும் அவர் அடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில், திருச்சி அணி ஆடிய லீக் போட்டியின் போது, பவுண்டரி லைன் அருகே முரளி விஜய் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள், 'DK, DK' என தினேஷ் கார்த்திக் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். இதனைக் கேட்ட முரளி விஜய், சில நொடிகள் கழித்து ரசிகர்களை நோக்கி, சிரித்தபடியே கையெடுத்துக் கும்பிட்டு நிறுத்தும் படியும் சைகையாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
#TNPL2022 DK DK DK ......
Murali Vijay reaction pic.twitter.com/wK8ZJ84351
— Muthu (@muthu_offl) July 7, 2022