பொளந்துகட்டிய பட்லர்.. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்து சாதனை படைத்த இங்கிலாந்து..முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்து தனது முந்தைய சாதனையை தற்போது முறியடித்துள்ளது இங்கிலாந்து அணி.

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீன்-யில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேசன் ராய் - பில் சால்ட் களமிறங்கினர். ஜேசன் ராய் 1 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலான் - சால்ட் இணை, நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டேவிட் மலான் 125 ரன்கள் குவித்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
பட்டையை கிளப்பிய பட்லர்
அதிரடியாக விளையாடிவந்த டேவிட் மலான் - சால்ட் இணை அவுட் ஆனாலும், அடுத்து களத்திற்கு வந்த பட்லர் - லிவிங்ஸ்டன் ஜோடி, ருத்ரதாண்டவம் ஆடி ரசிகர்ளை திகைக்க வைத்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 70 பந்துகளை சந்தித்து 162 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடக்கம். அதேபோல, மறுமுனையில் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டன் 22 பந்துகளை சந்தித்து 66 ரன்களை குவித்தார். அவர் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. நெதர்லாந்து அணியின் பாய்ஸிவன் 10 ஓவர்கள் வீசி 108 ரன்களை வழங்கினார்.
புதிய உலக சாதனை
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்திருந்ததே இதுவரையில் ஒருநாள் போட்டியில் ஒரு அணி அடித்த அதிக ரன்னாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது. .

மற்ற செய்திகள்
