"அந்த டீம்மை அவங்க சொந்த மண்ணுல தோக்கடிக்கிறது தான் இப்போ முக்கியம்" - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சொன்ன 'நச்' கருத்து
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
Also Read | ரஞ்சிக்கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு சதம்.. அசத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்.. வயசானா என்ன?
இந்தியாவும் இங்கிலாந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 130 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 49 போட்டிகளில் வென்றது, இந்தியா 31 முறை வெற்றி பெற்றது, 50 போட்டிகள் டிராவில் முடிந்தது.
கவாஸ்கர் இங்கிலாந்தை முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்கடித்த இந்திய அணியில் வீரராக இருந்தவர். அப்போது லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்டிலும், ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த 2வது டெஸ்டிலும் டிரா செய்த பிறகு, இந்தியா ஓவலில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் 1-0 என வென்றது.
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகளுக்கு காரணமான வீரர்களை கொண்டாடும் வகையில் சோனி ஸ்போர்ட்ஸ் ‘ஆர்கிடெக்ட்ஸ் இன் ஒயிட் — இந்தியா கிரிக்கெட் இன் இங்கிலாந்து’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இதற்கு முன்னதாக அவ்விழாவில் கவாஸ்கர் பேசிய கருத்துக்கள் வந்துள்ளன.
புகழ்பெற்ற இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், "இங்கிலாந்தை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடிப்பதே இந்திய அணியின் நோக்கம் என்றும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி வேறு எந்த மோதலையும் விட பெரியது" என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலையில் உள்ளது. 2007க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு தீவிர வாய்ப்பு உள்ளது.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மீண்டும் திட்டமிடப்பட்ட ஐந்தாவது டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது, போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.