"கோலி இவ்ளோ ரன் தான் அடிப்பாரு.." கரெக்ட்டா GUESS பண்ணி பிரம்மிக்க வெச்ச ரசிகர்.. "BALL எவ்ளோ'ன்னு கூட கச்சிதமா சொல்லி இருக்காரே.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jul 16, 2022 06:25 PM

இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்து வரும் விராட் கோலி மீது தொடர்ந்து விமர்சனம் உருவாகி வருகிறது.

Fan predicts virat kohli runs with balls in 2 nd odi

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, இதுவரை ஒரு சர்வதேச சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் கோலி, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முறையே 11 மற்றும் 20 ரன்களை இரண்டு இன்னிங்ஸ்களில் எடுத்திருந்தார் கோலி.

மீண்டும் சொதப்பல்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி 20 தொடரின் இரண்டாவது போட்டியில், 1 ரன்னும், மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் 11 ரன்னும் எடுத்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் களமிறங்காத விராட் கோலி, இரண்டாவது போட்டியில் களமிறங்கி 16 ரன்களில் அவுட் ஆகி நடையைக் கட்டினார்.

இதனால் கோலி மீதான விமர்சனங்கள் அதிகமாக எழ ஆரம்பித்தது. பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட, விராட் கோலி ஃபார்ம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அது போக, இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 தொடரில், விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்றும் அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

கரெக்ட்டாக கணித்த ரசிகர்

நாளை (17.07.2022) இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில், கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், கோலி அடிக்கப் போகும் ரன்னை ரசிகர் ஒருவர் முன்பே சரியாக கணித்து சொன்ன விஷயம், பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, 25 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கோலி அவுட் ஆனார். அவர் ஆட்டம் இழப்பதற்கு முன்பாகவே, ட்விட்டரில் ரசிகர் ஒருவர், 16(25) என கோலி அடிக்கப் போகும் ரன்னை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். கோலி அடிக்கும் ரன் மட்டுமில்லாமல், எத்தனை பந்துகளில் அடிப்பார் என்பதையும் அவர் சரியாக கணித்த விஷயம் தான், பலரையும் வியந்து போக செய்துள்ளது.

இது தொடர்பான கிரிக்கெட் ரசிகரின் பதிவின் கீழ், பலரும் பலவிதமான கமெண்ட்டுகளை மிகவும் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

Tags : #VIRATKOHLI #IND VS ENG #CRICKET #FAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fan predicts virat kohli runs with balls in 2 nd odi | Sports News.