IPL தொடரில் இருந்து விலகிய பிரபல RCB வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேனான வில் ஜாக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை சாதனை படைக்கும் நோக்கில் களமிறங்கும் என ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்த வில் ஜாக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணியை சேர்ந்த வில் ஜாக்ஸ் கடந்த ஆண்டு தான் அறிமுகம் ஆனார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகியவற்றில் விளையாடி வரும் ஜாக்ஸ், சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
காயம்
இந்நிலையில் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜாக்ஸ் காயமடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வில் ஜாக்ஸ்-ஐ 3.2 கோடி ரூபாய்க்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில், காயம் காரணமாக வில் ஜாக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வில் ஜாக்ஸ் விலகுவதாக அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
