"கோலி CENTURY அடிச்சா தான் கல்யாணம்".. சொன்னபடியே செஞ்ச ரசிகர்.. "அவர் கல்யாணத்து அன்னைக்கி கோலி கொடுத்த கிஃப்ட்"!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 18, 2023 07:09 PM

இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர்களை வெற்றிகரமாக முடித்திருந்த இந்திய அணி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட் ஆடி வருகிறது.

Fan who vowed not to get married till kohli century married now

Also Read | "விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!

முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. இந்த 3 போட்டிகளிலும் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த இந்திய அணி, கடைசி ஒரு நாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறையும் படைத்திருந்தது.

Fan who vowed not to get married till kohli century married now

அதே போல இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 3 போட்டிகளில் 2 சதங்கள் அடித்து அற்புதம் செய்திருந்தார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை முன்பு வரை கோலியின் பேட்டிங் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. சர்வதேச போட்டியில் 70 சதங்கள் அடித்திருந்த கோலி, ஆசிய கோப்பைக்கு முன்பு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். அது மட்டுமில்லாமல், பெரிய அளவில் சிறந்த இன்னிங்ஸும் ஆடாமல் கோலி இருந்தது, பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

Fan who vowed not to get married till kohli century married now

தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் ஆசிய கோப்பையில் இருந்து விடை சொல்ல ஆரம்பித்த கோலி, டி 20 உலக கோப்பை, வங்காளதேச தொடர், இலங்கை தொடர் என அடுத்தடுத்து சிறப்பாக ஆடி தான் கிங் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

இந்த நிலையில், கோலி ரசிகர் ஒருவர் குறித்த செய்தி ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச போட்டியில் 70 ஆவது சதமடித்திருந்த கோலி, தனது 71 ஆவது சதத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் மேல் காத்திருந்த கோலி ரசிகர்கள், 71 ஆவது சதத்தை காண ஆவலுடன் இருந்து வந்தனர்.

Fan who vowed not to get married till kohli century married now

அதில், அமன் அகர்வால் என்ற ரசிகர், கோலி 71 ஆவது சதத்தை அடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேனர் வைத்திருந்தார். இது பெரிய அளவில் அந்த சமயத்தில் வைரலாகி இருந்தது. அப்படி இருக்கையில், கோலி தற்போது 71 ஆவது சதம் தாண்டி, 74 ஆவது சர்வதேச சதத்தையும் அடித்துள்ளார்.

Fan who vowed not to get married till kohli century married now

இந்த நிலையில், அமன் அகர்வால் என்ற ரசிகர் தான் கூறியது போலவே, கோலி 71 ஆவது சதமடித்த பின்னர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதிலும் அவர் திருமணம் செய்த அன்று கோலி தனது 74 ஆவது சதத்தை அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!

Tags : #CRICKET #VIRAT KOHLI #KOHLI FANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fan who vowed not to get married till kohli century married now | Sports News.