"விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பதாயிக்கர என்னும் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மனைவி பெயர் சீனத். இந்த தம்பதியரின் மகள் பெயர் பாத்திமா பதூல்.

பாத்திமாவுக்கும் மூர்க்க நாடு என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் வீட்டில் வைத்து மைலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றது.
புத்தம் புது ஆடை அணிந்தபடி குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் மத்தியில் உற்சாகமாகவும் கலந்து கொண்டிருந்தார் பாத்திமா பதூல். திருமணம் குறித்த கனவுகளும் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும் என தெரிகிறது. அப்படி இருக்கையில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. மணப்பெண் பாத்திமா, திடீரென அங்கே மயங்கி விழுந்ததை கண்டு அனைவரும் பதறி போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையிலும் குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மயக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாத்திமாவை பரிசோதனை செய்த போது சத்தம் இல்லாத நெஞ்சு வலியால் அந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல, இளம்பெண் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதன் பின்னரே மரணத்திற்கான உறுதியான காரணம் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு நாளில் திருமண வாழ்க்கையை தொடங்க இருந்த இளம்பெண், திடீரென வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
