"பந்தை ஏன்யா என்மேல எறியுறீங்க?".. அம்பையர் காலை பதம் பார்த்த பந்து.. ஒரு ரன் அவுட்டுக்கு ஆசைப்பட்டு.. பாவம் மனுஷன்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நடுவர் மீது பாக். வீரர் பந்தை வீச, அதனால் நடுவர் காயமடைந்திருக்கிறார்.

Also Read | அண்ணாத்த ஆடுறார்.. மேட்ச்-ல ஜெயிச்ச அப்புறம் கோலி போட்ட குத்தாட்டம்.. கூட யாருன்னு பாருங்க.. வீடியோ..!
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளும் டிரா ஆனது. இதனையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது.
கராச்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கான்வே சதமடிக்க, அவருக்கு கேப்டன் வில்லியம்சன் கம்பெனி கொடுக்க அணியின் ஸ்கோர் எகிறியது. ஆனால். அதன்பின்னர் வந்த யாரும் நிலைத்து ஆடாததால் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 261 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாகிஸ்தான் பவுலர்களில் நவாஸ் 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்ததால் 43 ஓவர்களில் 182 ரங்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸின் 36வது ஓவரில், ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் கிளென் பிலிப்ஸ் ஃபிளிக் செய்தார். பேட்ஸ்மேன்கள் இருவரும் சிங்கிள் எடுத்தனர். அப்போது அந்த ஸ்பாட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த முகமது வாசிம் ஜூனியர் பந்தை நான்-ஸ்ட்ரைக்கர் எண்ட் நோக்கி வீசினார். ஆனால் பந்து அம்பையர் அலீம் தாரின் வலது காலில் தாக்கியது. வலியால் துடித்த அவர் கையில் இருந்த ஸ்வெட்டரை கீழே வீசினார். தொடர்ந்து அவர் பீல்டரிடம் கோபமடைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, ஓடிவந்த பாகிஸ்தான் வீரர்கள் அம்பையருக்கு உதவி செய்தனர். பிறகு பாகிஸ்தான் பிசியோ ஓடிவந்து ஸ்ப்ரே அடிக்க, சிறிதுநேரத்தில் மேட்ச் மீண்டும் துவங்கியது.
Ouch 😬🙏#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/JyuZ0Jwxi5
— Pakistan Cricket (@TheRealPCB) January 11, 2023

மற்ற செய்திகள்
