legend others

'சிறந்த நியூஸிலாந்துக்காரர்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, WORLDCUP-ல் கலக்கிய 'இங்கிலாந்து' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 19, 2019 05:27 PM

இங்கிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமான பென் ஸ்டோக்ஸ், நியூஸிலாந்து அணியை கடைசிவரை வெற்றி எனும் இலக்கை நோக்கி அழைத்துச் சென்ற நியூஸிலாந்து உலகக் கோப்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் இருவருக்கும் சிறந்த நியூஸிலாந்துக் காரர் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Eng Player ben stokes nominated for NewZealander award

நடந்து முடிந்த உலகக் கோப்பை 2019 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் ஆடிய ஆட்டம் முதலி டை ஆகி, பின்னர் சூப்பர் ஓவர் முறையில் விளையாண்டு டிரா ஆகி, கடைசியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்வதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பந்து பவுண்டரி சென்ற சம்பவம் விவாதத்துக்குள்ளானது. இதற்கு பென் ஸ்டோக்ஸ் தனது வருத்தத்தை பதிவு செய்து, கேன் வில்லியம்ஸனிடம் மன்னிப்பு கூட கேட்டார். கேன் வில்லியம்ஸனோ, அந்தத் தோல்வியிலும் இயல்பாக சிரித்தபடி பேசியது பலரையும் நெகிழ வைத்தது.

இந்த நிலையில் இந்த 2 வீரர்களும் சிறந்த நியூஸிலாந்துக்காரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கேன் வில்லியம்ஸன் சரி, ஆனால் இங்கிலாந்து வீரர் பென் ஸாடோக்ஸ் எப்படி இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் எழலாம். ஆனால் பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில், நியூஸிலாந்து ரக்பி அணிக்காக விளையாண்டவருக்கு மகனாக பிறந்தார்.

அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ்க்கு 12 வயது இருந்தபோது, அவரது தந்தைக்கு இங்கிலாந்தின் ரக்பி அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றச் சென்றபோது இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். இப்படித்தான் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வீரராக வலம் வந்துள்ளார். ஆனாலும் பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் தற்போது நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில்தான் தற்போது வசித்து வருகின்றனர் என்பதால் பென் ஸ்டோக்ஸ் இவ்விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக இவ்விருதின் தேர்வுக்குழு தலைவர் பென்னட் குறிப்பிட்டுள்ளார். இதனால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ந்துள்ளனர். 

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #ENGVNZ #KANE WILLIAMSON #BEN STOKES #NEWZEALANDERAWARD