ஆட்டிப்படைக்கும் கொரோனா! 'ஐபிஎல்' போட்டிகள் தொடர்பாக.... அதிரடி 'முடிவெடுத்த' பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா முழுவதும் கொரோனா ஆட்டிப்படைத்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான புதிய முடிவொன்றை பிசிசிஐ எடுத்துள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 15-ம் தேதி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா என மாநில அரசுகள் பலவும் ஐபிஎல் போட்டிகளை தங்களது மாநிலத்தில் நடத்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை பிசிசிஐ நடத்துமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிசிசிஐ ஒத்தி வைத்துள்ளது.
