"அப்படியே 'கனவு' மாதிரி இருக்குங்க... இதுக்காக தான் இவ்ளோ நாள் 'WAITING'!!!..." லைக்குகளை அள்ளிக் குவிக்கும் நடராஜனின் லேட்டஸ்ட் 'போட்டோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 25, 2020 08:15 PM

தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியிருந்த நிலையில், மிக அற்புதமாக பந்து வீசி பல முன்னாள் வீரர்களின் கவனத்தை பெற்றார்.

T natarajan share his latest photo in retro indian jersey

பல சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் இருந்த போதும், அதிக யார்க்கர் பந்துகளை நடராஜன் தான் வீசியிருந்தார். அதுவும் இல்லாமல் தோனி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் வலைப்பயிற்சியில் பந்து வீசக் கூடிய பந்து வீச்சாளர்களில் நடராஜன் பெயர் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர், டி 20 அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியிருந்த நிலையில், அவருக்கு பதிலாக டி 20 அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடராஜன் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். 90 களில் இந்திய கிரிக்கெட் அணிந்திருந்த ஜெர்சியைத் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி அணியவுள்ளது. அந்த ரெட்ரோ தீம் ஜெர்சி அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடராஜன், 'இந்த ஸ்பெஷல் ஜெர்சி அணியும் போது ஒருவிதமான ஸ்பெஷல் உணர்வு உள்ளது' என குறிப்பிட்டுள்ளார். 

 

கிட்டத்தட்ட கனவு நனவான தருணம் போல்  நடராஜனுக்கு இது அமைந்துள்ள நிலையில், இந்த புகைப்படம் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T natarajan share his latest photo in retro indian jersey | Sports News.