“INTERNET வேலை செய்யலனு நெனைச்சேன்!”... குளியலறையில் இருந்து வெளியே வந்த மனைவியை... நேரலை வீடியோ கான்பிரன்சிங்கில் எம்.பி செய்த ‘பரபரப்பு’ காரியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அர்ஜென்டினாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனைவியின் அங்கங்களை முத்தமிட்டதன் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார், அத்துடன் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.

பாராளுமன்ற நேரலை நிகழ்வின்போது, சபாநாயகர் வீடியோ திரையில் தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மற்ற பங்கேற்பாளர்களும் அவரவர் வீடுகளில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஜுவான் எமிலியோ அமெரி எனும் பாராளுமன்ற உறுப்பினர், தனக்கு அருகில் இருந்த பெண்ணின் அங்கங்களை முத்தமிட்ட காட்சி வீடியோ கான்பிரன்சிங்கில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் வடகிழக்கு மாகாணமான சால்டாவைச் சேர்ந்த அந்த பாரளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் செர்ஜியோ மாஸா என்பவரால் 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதுபற்றி பேசிய சபாநாயகர் மாஸா, "கடந்த மாதங்களில் நாங்கள் தொலைபேசியில் பணிபுரிந்த முழு நேரமும் பிரதிநிதிகள் தூங்குவது உள்ளிட்ட பல சம்பவங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம், ஆனால் எல்லைகளை மீறிய ஒரு சூழ்நிலையாக இந்த சம்பவம் இருந்தது," என்று கூறினார்.
இதனிடையே இந்த காரியத்தை செய்த 47 வயதான பாராளுமன்ற அமெரி மன்னிப்பு கேட்க முயன்றதுடன், அந்த குறிப்பிட்ட தருணத்தில், தான் வீடியோ இணைப்பில் இணைந்திருப்பதே நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசியவர், "இங்கே நாட்டின் மையத்தில் இணைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் என் மனைவி குளியலறையிலிருந்து வெளியே வந்தார், பத்து நாட்களுக்கு முன்பு அவளுக்கு அறுவை சிகிச்சை செய்த அவரது அங்கங்களை பார்வையிட்டபோது முத்தமிட்டேன்" என்று விளக்கமளித்தார்.

மற்ற செய்திகள்
