பார், 'தளபதி'யா மாறி நிக்குற 'வார்னர' பார்... 'இன்ஸ்டா'வில் வைரலாகும் 'வீடியோ'... 'ஒரு முடிவோட தான் இருக்காரு போல'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்றின் காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தங்களது பணிகள் மற்றும் படிப்பு சம்மந்தமான விஷயங்களை வீட்டிலிருந்தே மேற்கொண்டு வந்தனர்.

இதனால், கிரிக்கெட் வீரர்கள் அதிக சமயங்களை தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே கழித்து வந்தனர். சிலர், இதனை வீடியோவாகவும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ செய்து வந்தார்.
டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், புட்ட பொம்மா உள்ளிட்ட சில தெலுங்கு பாடல்களுக்கும் டிக் டாக் செய்து வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி ஹிட் அடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, டிக் டாக்கில் பல இந்திய திரைப்பட பாடல்களுக்கு வீடியோ செய்து வந்த வார்னர், அதன் பிறகு 'ஃபேஸ் ஆப்' செயலி மூலம் மற்ற நடிகர்களின் முகத்தை தனது முகத்துடன் எடிட் செய்து, சில வீடியோக்களையயும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
ஷாருக் கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் வரிசையில், டேவிட் வார்னர் தற்போது நடிகர் விஜய்யின் திரைப்படங்களில் வரும் காட்சிகளில் தனது முகத்தினை மார்பிங் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் பாடலுடன், இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ள நிலையில், மற்ற வீடியோக்களை போல இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் விஜய்யின் காட்சிகளை மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளதால், விஜய் ரசிகர்களிடையேயும் இந்த வீடியோ அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
