"ரொம்ப தேங்க்ஸ் 'விராட் கோலி'... நாங்க தோத்தாலும் இத நெனச்சு சந்தோசமா இருக்கு..." நெகிழ்ச்சியுடன் 'வார்னர்' போட்ட வைரல் 'பதிவு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கேப்டன் விராட் கோலிக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்திருந்த நிலையில், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியிருந்தது. அதிலும் குறிப்பாக, டெஸ்ட் தொடரை வென்று சொந்த மண் திரும்பியிருந்த இந்திய அணிக்கு உலகளவில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விராட் கோலி, தனது ஜெர்சியை வார்னரின் மகளுக்கு பரிசளித்திருந்த நிலையில், அவரது மகள் அதனை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்றை வார்னர் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், 'நாங்கள் தொடரை இழந்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இங்கு ஒரு பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். உங்கள் ஜெர்சியை நீங்கள் பரிசளித்ததற்கு நன்றி. இண்டிக்கு இது முற்றிலும் பிடித்துப் போயுள்ளது. அவளது அப்பா மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரை விட, அவளுக்கு விராட் கோலியைத் தான் மிகவும் பிடிக்கும்' என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வார்னர் மகளின் புகைப்படம் மற்றும் அவரது தன்னலமற்ற பதிவும் தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
