பொங்கலுக்கு வரும் ‘மாஸ்டர்’!.. தியேட்டர் டிக்கெட் கவுன்டர்களில் ‘கூட்டம் கூட்டமாக’ குவிந்த ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்கு கூட்டம் கூட்டமாக முண்டியடித்தனர்.

ஜனவரி 13ம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தியேட்டர்களில் தொடங்கிவிட்டன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து காத்திருந்த ரசிகர்கள், டிக்கெட்டை வாங்குவதற்காக திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு வருகின்றனர்.
தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பதால், டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் மாஸ்டர் திரையிட உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் அலைஅலையால் டிக்கெட் கவுன்டர்களில் திரண்டனர். இதில் பலர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையான தனிமனித இடைவெளி போன்றவை காற்றில் பறந்தது.

மற்ற செய்திகள்
