VIDEO : 'யோவ்! என்னா மனுஷன் யா நீ'... 'இத பேச எவ்வளவு பெரிய மனசு வேணும் யா'... ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக, தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிய நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில், சில வீரர்கள் காயமடைந்ததால் நடராஜனுக்கு டி 20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்த நிலையில், அதனை மிகக் கச்சிதமாக அவர் பயன்படுத்தவும் செய்தார்.
அறிமுக போட்டிகளிலேயே தேர்ந்த பந்து வீச்சாளரின் அனுபவத்தைக் காட்டிய நடராஜன், தனக்கான முத்திரையையும் பதித்தார். இதனையடுத்து, தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வீரர்கள் சொந்த ஊர் திரும்பியிருந்த அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
அதிலும் குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனின் கிராமத்தில் மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடராஜனைப் புகழ்ந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இதில், 'வாழ்த்துக்கள் நட்டு' என வார்னர் தமிழில் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய வார்னர், 'உண்மையிலேயே நீங்கள் மிகப் பெரிய லெஜண்ட். இதை நான் பலமுறை கூறியுள்ளேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நீங்கள் சிறந்த மனிதர். அதனை மீண்டும் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களோடு ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது' என நடராஜனை வார்னர் பாராட்டியுள்ளார்.
Vaalthookool Nattoo, Vaalthookool Nattoo!
Rascal scoring at a faster strike rate off the field than on it! 😂😂😂😂😂😂 pic.twitter.com/sqkxStWK7i
— Srini Mama (@SriniMaama16) January 22, 2021
பஞ்சாப் அணியில் சேவாக் முதல் முறையாக நடராஜனுக்கு வாய்ப்பளித்திருந்த நிலையில், அதன் பிறகு அவருக்கு அதிக வாய்ப்பளித்து இந்த உலகிற்கு அறிய செய்ததில் மிக முக்கிய பங்கு வார்னருக்கு உண்டு. அது மட்டுமில்லாமல், நடராஜன் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது முதல் அவர் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடிய போதெல்லாம் அவரை வாழ்த்த வார்னர் தவறியதில்லை.

மற்ற செய்திகள்
