"எனக்கு இப்டி ஒரு அவார்டு கெடச்சா நல்லாயிருக்கும்ல..." 'வார்னர்' பகிர்ந்த 'போட்டோ'... அதுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருக்கற அசத்தல் 'CONNECTION'!!!... வேற லெவல் 'வைரல்' போங்க!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Dec 30, 2020 03:55 PM

சில தினங்களுக்கு முன் ஐசிசி சிறந்த பத்து ஆண்டுகளுக்கான வீரார்கள் விருது பட்டியலை அறிவித்திருந்தது. டெஸ்ட் போட்டியின் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும், ஒரு நாள் போட்டியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி மற்றும் டி 20 போட்டிக்கான சிறந்த வீரராக ஆப்கானிஸ்தான் இளம் வீரர் ரஷித் கானும் விருதை தட்டிச் சென்றனர்.

david warner acknowledge himself as best tiktoker of the year

முன்னதாக, கொரோனா தொற்றின் காரணமாக பல மாதங்கள் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். பலர் பலவிதமான பொழுது போக்குகள் மூலம் தங்களது நேரத்தை கழித்து வந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரரான டேவிட் வார்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிக் டாக் செய்வதில் ஈடுபட்டிருந்தார். அதிலும் குறிப்பாக, தெலுங்கு மற்றும் ஹிந்தி பாடல்களுக்கு அவர் செய்த வீடியோக்கள், இந்திய ரசிகர்களிடையே மிகப் பெரும் ஹிட்டடித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு சிறந்த டிக் டாக்கர் விருதை 'ஐசிசி' அளித்துள்ளதை போன்று புகைப்படம் ஒன்றை காமெடியாக பகிர்ந்துள்ளார். அதில், இந்திய வீரர் யுஸ்வேந்த்ர சாஹலை டேக் செய்து, நாங்கள் இருவரும் வெற்றியாளர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரின் மற்ற பதிவுகளை போல இதுவும் அதிகம் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவில் மேலும் ஒரு சிறப்பம்சம் இடம்பெற்றுள்ளது.

 

அதாவது, தமிழகத்தின் தென் மாவட்டத்தை சேர்ந்த டிக் டாக்கில் பிரபலமான ஜி.பி. முத்து பெயர், வார்னர் பகிர்ந்துள்ள விருதின் மீது இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பை இந்த புகைப்படம் பெற்றுள்ள நிலையில், தமிழக ரசிகர்களும் இதனை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஜி.பி முத்து யார் என்பது தெரிந்து தான் வார்னர் பகிர்ந்தாரா என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. David warner acknowledge himself as best tiktoker of the year | Sports News.