வீடியோக்களுக்கு 'பணம்'... 'சீன' டிக் டாக் ஆப்க்கு... செம டப் கொடுக்கும் 'இந்திய' சிங்காரி!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு மாற்றான ஆப்களின் பக்கம் இந்திய பயனாளர்களின் கவனம் தற்போது திரும்பி இருக்கிறது.

அந்த வகையில் முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 'சிங்காரி' செயலி தற்போது பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் உள்ளது. வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி இந்த ஆப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வீடியோ எவ்வளவு வைரலாகிறது என்பதை பொறுத்து இந்த சிங்காரி ஆப் தனது பயனாளர்களுக்கு பணம் கொடுக்கும். ஒரு பயனர் இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோவுக்கும் அந்த வீடியோவின் உள்ளடக்கத்தை உருவாக்கியவருக்கு ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புள்ளி அளிக்கப்படும். மேலும் இந்த புள்ளிகளை பணமாக திரும்பபெற்றுக் கொள்ளலாம். வீடியோக்களுக்கு பயனர்களின் புகழை பெறும் டிக் டாக் போலல்லாமல் சிங்காரி பயனருக்கு அங்கீகாரத்துடன் பணம் செலுத்துகிறது.
இதுபோல டிக் டாக்குக்கு மாற்றாக கருதப்பட்ட மற்றொரு இந்திய ஆப்பான மித்ரோன் பாகிஸ்தானின் மென்பொருள் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அதோடு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த ஆப் பிளே ஸ்டோரில் இடம் பிடித்தாலும் எந்தளவு அதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இந்த இரு ஆப்களும் டிக் டாக் செயலிக்கு மாற்றாக கருதப்பட்டாலும் இவை எந்தளவுவுக்கு டிக் டாக் இடத்தை நிரப்பப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

மற்ற செய்திகள்
