VIDEO : "இன்னா தல,,.. ஒரு 'கேப்டன்' நீங்களே இப்டி பண்ணலாமா??... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்??.." முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. "அப்படி என்னத்த பண்ணாரு??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக, இந்த போட்டிக்கான டாஸ் போடும் போது டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் மார்க் நிகோலஸ் அணியிலுள்ள மாற்றங்கள் குறித்து கேட்டார். ப்ரித்வி ஷா மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு பதிலாக பிரவீன் துபே மற்றும் ஹெட்மயர் ஆகியோர் நேற்றைய போட்டியில் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தனர்.
இதுகுறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசிய போது, ஹெட்மயர் பெயரை சொல்ல மறந்து விட்டார். ஒரு நிமிடம் ஷ்ரேயாஸ் ஐயர் முழித்த நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், ஹெட்மயர் பெயரை ஞாபகப்படுத்தினார். டாஸ் இடுவதற்கு முன்னர் இரு அணி கேப்டன்களும் அணியிலுள்ள மாற்றங்கள் குறித்து தெரிவித்து கொண்டதால் வார்னரால் ஷ்ரேயாஸுக்கு உதவி செய்ய முடிந்தது.
— Simran (@CowCorner9) November 9, 2020
இது தொடர்பான வீடியோ நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
