‘ஐபிஎல் கோப்பைய ஜெயிச்சா கட்டாயம் இத செய்வேன்!’.. 'ரசிகர்களுக்கு' சத்தியம் செஞ்சு கொடுத்த கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Nov 08, 2020 10:35 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

david warner promised this if SRH won IPL2020 cup

முன்னதாக லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பெற்ற டெல்லி அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்சிடம் படுதோல்வி அடைந்தது. ஆனால் புள்ளி பட்டியலில், டாப்-2 இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இன்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  இதில் ஹைதராபாத் அணி சார்பாக வார்னர் (கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன் ஆகியோரும், டெல்லி அணியில் ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்ஷல் பட்டேல் அல்லது பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், ரபடா, நோர்டியா ஆடினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து, ஐபிஎல் கோப்பையையும் வென்றால் ஹைதராபாத் ரசிகர்கள் தன்னிடம் விரும்பும் ஒரு விஷயத்தை செய்வேன் என டேவிட் வார்னர் சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.  முன்னதாக பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியதால் ஹைதராபாத் அணி, இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதனால் டெல்லி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐபிஎல் கோப்பை வென்றால் தான் ரசிகர்கள் விரும்பியபடி, ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்துவேன் என சத்தியம் செய்தார் வார்னர். லாக்டவுன் நேரத்தில் டேவிட் வார்னர் தன் குடும்பத்தினருடன் டிக்டாக்கில், பிரபல தெலுங்கு திரைப்பட பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. David warner promised this if SRH won IPL2020 cup | Sports News.