'TIKTOK'-ல பிரபலமா இருந்த பொண்ணு... பியூட்டி பார்லர்-ல் பொணமா கிடக்குறாங்க... - அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக் டாக்கில் பிரபலமான ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஷிவானி என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவானி என்ற இளம்பெண் ஹரியானா மாநிலத்தில் குந்தில் என்னும் பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து அவரது நண்பர் நீரஜ் என்பவரும் அழகு நிலையத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளார். அப்போது, அங்கிருந்த கட்டிலின் படுக்கையில் ஷிவானியின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக ஷிவானி உடல் அங்கிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. மேலும், ஷிவானியின் செல்போனும் தொலைந்து போனது தெரிய வந்தது. ஷிவானி கொலை செய்யப்பட்ட தகவலறிந்த பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிஃப் என்ற இளைஞர் மீது புகாரளித்தனர்.
முன்னதாக ஆரிஃப், கடந்த 3 ஆண்டுகளாக ஷிவானியின் பின் காதலின் பெயரில் தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஷிவானி அவரை தவிர்த்து வந்துள்ளார். இருந்த போதும் தொடர்ந்து ஆரிஃப் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஷிவானி மற்றும் ஆரிஃப் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக ஷிவானியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் ஆரிஃப் பெயரில் புகாரளித்ததை தொடர்ந்து ஆரிஃப்பை போலீசார் கண்டித்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிஃப் வந்ததாக தெரிகிறது. ஆரிஃப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாடளுக்கு பிறகு தான் வீட்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷிவானியின் உடல், அழகு நிலையத்தில் கிடைத்ததன் மூலம், ஷிவானியின் கழுத்தை நெரித்து கொலை செய்து பின் அவரின் எண்ணில் இருந்து சகோதரியின் எண்ணிற்கு ஆரிஃப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து ஆரிஃப்பை போலீசார் கைது செய்த நிலையில், அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். காதலின் பெயரில் தொல்லை கொடுத்து பின் ஏற்பட்ட அவமதிப்பால் தான் இந்த படுகொலை நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஷிவானிக்கு டிக் டாக் செயலியில் ஒன்றரை லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
