இதை யாராவது நோட் பண்ணீங்களா..? புது ஜெர்சியில் சிஎஸ்கே லோகோவுக்கு மேலே இருக்கும் 3 ஸ்டார்.. காரணம் என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஜெர்சியில் இடம்பிடித்திருக்கும் 3 ஸ்டாருக்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிஎஸ்கேவின் முதல் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதால், அணி வீரர்கள் மும்பைக்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
Don't fall in love, it's just a Jersey.
The Jersey: pic.twitter.com/oiOwQHSsAq
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2021
இந்த நிலையில் முதல்முறையாக ஜெர்சியில் மாற்றம் செய்து, புதிய ஜெர்சியை சிஎஸ்கே அறிமுகப்படுத்தியது. அதில், இந்திய ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இரு தோள்பட்டையிலும் இந்திய ராணுவ உடை போன்ற டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிஎஸ்கே லோகோவுக்கு மேலே 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன. இது மூன்று முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளதை குறிக்கும் விதமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
