புதிதாக பிறந்த மகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ரொனால்டோ.. ஹார்டின்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய புதிதாக பிறந்த மகளின் புகைப்படத்தை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். சமூக வலை தளங்களில் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தற்போது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பெரும் சோகம்
கடந்த அக்டோபர் மாதத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக ரொனால்டோ அறிவித்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை மட்டும் பிறந்து ஆண் குழந்தை இறந்து விட்டதாக ரொனால்டோ சோகத்துடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் "புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்திருப்பதை ஆழ்ந்த சோகத்தோடு தெரிவிக்கிறோம். எந்த பெற்றோரும் உணரக்கூடிய கடுமையான வலி இது. கொஞ்சம் நம்பிக்கையோடும் கொஞ்சம் மகிழ்ச்சியோடும் இந்த தருணத்தில் இருப்பதற்கு காரணம் புதிதாக பிறந்த பெண் குழந்தை தான்" என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
வீட்டிற்கு வந்த தேவதை
தன்னுடைய புதிதாக பிறந்த மகளை தேவதை என ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ரொனால்டோ தற்போது, புதிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரொனால்டோ புதிதாக பிறந்த தனது குழந்தையுடன் அமர்ந்திருக்க அவரது மனைவி, மகன் மற்றும் மகள்கள் அருகில் இருக்கிறார்கள்.
அந்த பதிவில்,"ஹோம் ஸ்வீட் ஹோம். ஜியோவும் எங்கள் பெண் குழந்தையும் இறுதியாக எங்களுடன் இணைந்துள்ளனர். உங்களது அனைத்து அன்பான வார்த்தைகளுக்கும் ஆறுதலுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. எங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். இந்த உலகத்திற்கு நாம் இப்போது வரவேற்றுள்ள புதிய உறுப்பினருக்கு நன்றியுடன் இருக்க வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகனது மறைவினால் வாடிய ரொனால்டோவிற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறிவந்த நிலையில், தன்னுடைய மகளுடன் வீடு திரும்பிய புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரொனால்டோ.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
