மகன் இறந்த சோகத்தோடு களமிறங்கிய ரொனால்டோ.. கோல் அடிச்ச அப்பறம் செஞ்ச நெகிழ்ச்சியான காரியம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் கோல் அடித்த பிறகு செய்த செயல் பார்வையாளர்கள் மற்றும் சக வீரர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தற்போது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பெரும் சோகம்
கடந்த அக்டோபர் மாதத்தில் தனக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக ரொனால்டோ அறிவித்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை மட்டும் பிறந்து ஆண் குழந்தை இறந்து விட்டதாக ரொனால்டோ சோகத்துடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் "புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்திருப்பதை ஆழ்ந்த சோகத்தோடு தெரிவிக்கிறோம். எந்த பெற்றோரும் உணரக்கூடிய கடுமையான வலி இது. கொஞ்சம் நம்பிக்கையோடும் கொஞ்சம் மகிழ்ச்சியோடும் இந்த தருணத்தில் இருப்பதற்கு காரணம் புதிதாக பிறந்த பெண் குழந்தை தான்" என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
கோல்
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் ரொனால்டோவின் மான்செஸ்டர் அணி ஆர்சனல் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 2-0 என்ற நிலையில் மான்செஸ்டர் அணி பின்தங்கி இருந்தவேளையில் 34 வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார்.
அந்த கோலை அடித்த பிறகு வானத்தை நோக்கி தனது விரலை காண்பித்தார் ரொனால்டோ. இறந்துபோன தனது மகனுக்கு கோலை அர்ப்பணிக்கும் நோக்கில் ரொனால்டோ செய்த இந்த செயலை பார்த்து அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும், லா லிகா பிரீமியர் தொடரில் 100 வது கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் இந்த கோல் மூலம் பெற்றார் ரொனால்டோ.
தனது மகனுக்கு கோலினை அர்ப்பணித்த புகைப்படத்தை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8