'வேண்டாம் 'தல'...'இத மட்டும் பண்ணாதீங்க'... 'உருகும் ரசிகர்கள்'... அடுத்த தொடரில் பங்கேற்பாரா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 12, 2019 03:40 PM
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்பாரா என்பது, மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்கள் முன்பு இருக்கிறது.

உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, நடப்பு உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது. இதனிடையே உலகக்கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும், அதனை தோனி தனது கைகளில் ஏந்திக்கொண்டு தனது ஓய்வினை அறிவிப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக உலகக்கோப்பை முடிவுகள் அமைந்தன.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டிகளுக்காக இந்திய அணி கரீபிய தீவுகளுக்கு செல்ல இருக்கிறது. இதற்கான வீரர்களின் தேர்வு வரும் ஜூலை 17, 18 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கேப்டன் கோலி மற்றும் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த தொடரில் தோனி பங்கேற்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக ரசிகர்கள் முன்பு உள்ளது. ஆனால் இவை அனைத்திற்கும் பதில் தோனியிடமே உள்ளது.
நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடரில், தோனி பங்கேற்காத பட்சத்தில் இந்திய அணியில் தற்போதுள்ள விக்கெட் கீப்பர்களான, தினேஷ் கார்த்திக், ரிஷ்ப் பண்ட் இருவரில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அதே நேரத்தில் தோனி நிச்சயம் தனது ஓய்வு முடிவை தற்போது எடுக்க கூடாது எனவும், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் உருக்கத்துடன் கூறி வருகிறார்கள்.
