ஐய்யோ..! ‘உலகக்கோப்பையில் இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 19, 2019 05:35 PM

உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

World Cup 2019: Shikhar Dhawan has been ruled out

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரன ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்போட்டியில் தவானுக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார். இதனை அடுத்து காயத்தின் காரணமாக தவான் கையில் கட்டுப்போட்டுள்ளதால் அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இதனால் தவானுக்கு பதிலாக விளையாட ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார்.

இதனிடையே நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து அடுத்து நடைபெறும் போட்டிகளில் தவான் விளையாடிவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயத்தில் வீரியம் அதிகமாக உள்ளதால் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து தவான் விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தவானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் அடுத்து நடைபெறும் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. தற்போது அனுபவ வீரரான ஷிகர் தவானும் விலகியிருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #DHAWAN #RULEDOUT #INJURY #TEAMINDIA