‘உலகக் கோப்பை போட்டிக்கான ஸ்பெஷல்‘... ‘ரகசியம் உடைத்த இந்திய வீரர்‘!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 19, 2019 05:51 PM
இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை போட்டிக்காக ஸ்பெஷல் டைமண்ட் செயின் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா, பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே அசத்தி வருபவர். அதுவும் இறுதிநேரத்தில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினால், அவரது அதிரடியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியிலும், சோயிப் மாலிக் மற்றும் ஹஃபீஸ் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா அசத்தினார்.
இந்நிலையில் பௌலிங், பேட்டிங்கிற்கு இணையாக வைரங்களையும் அவருக்கு பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய சுழற்பந்துவீச்சாளரான சாஹல், சாஹல் டிவி என்ற பெயரில் இந்திய வீரர்களை பேட்டி எடுத்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவ்வாறு பேட்டி எடுக்கும்போது உலகக் கோப்பைக்காக ஸ்பெஷலாக வாங்கிய வைர செயினை ஹர்திக் பாண்ட்யா காண்பித்தார். அதில் சிறிய அளவில் பேட் மற்றும் பந்து என இரண்டுமே செதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வாட்ச் மற்றும் மோதிரத்திலும் வைரங்களை பதித்துள்ள பாண்ட்யா, இது தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
What's with @hardikpandya7 & his love for Diamonds? This one is World Cup customised 💎💎😎😎 #TeamIndia #CWC19 pic.twitter.com/YuV3V7C9NH
— BCCI (@BCCI) June 18, 2019
