'கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி'... 'வைரலான வீடியோ'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 09, 2019 05:48 PM

அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிடிக்கும் முதல் விக்கெட் கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

captain virat kohli first catch in semi final viral photo

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான குப்தில் முதல் பந்தை எதிர்கொண்டபோதே,  எல்.பி.டபிள்யூ கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் மறுத்ததை தொடர்ந்து டி.ஆர்.எஸ். கோரினார் கேப்டன் விராட் கோலி. அதிலும் நாட் அவுட் என வந்தது.

பின்னர்  தொடர்ந்து விளையாடிய குப்தில் பும்ரா வீசிய நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். இரண்டாவது ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த கோலி, அருமையாக கேட்ச் பிடித்து அசத்தினார். குப்தில் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது.