'7 லட்ச ரூபாயா?'.. விளையாட்டு பிரபலத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம்.. 'இதுதான்' காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 09, 2019 05:24 PM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மைதானத்தை சேதப்படுத்தியாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்க்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Serena Williams fined 7 lakh for damaging the playground

டென்னிஸ் விளையாட்டு உலகில்,  7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்ற சீனியர் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.  ஆனால் இதற்கு முந்தையபயிற்சி ஆட்டத்தின்போது அவர் மைதானத்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டார்.

செரீனாவை விசாரணை செய்த இங்கிலாந்து கிளப், செரீனாவுக்கு 7லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. செரீனாவை அடுத்து, செரீனாவிடம் தோல்வி அடைந்த இத்தாலி வீராங்கனை ஃபாபியோ பாக்னினி விம்பிள்டன் தொடரில் குண்டுவெடிக்க வேண்டும் என்று பேசியதால் அவருக்கு 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : #SERENAWILLIAMS