‘பும்ரா அடித்த பந்தில்’... ‘நிலைகுலைந்த ஆஸ்திரேலிய இளம் வீரர்’... ‘பயிற்சி ஆட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் சோகம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தலையில் காயம் காரணமாக வெளியேறுவது, அந்த அணியை நிலைகுலைய செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற்ற இந்தி போட்டியில், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி, கார்த்திக் தியாகி பந்தால் தலையில் தாக்கப்பட்டு கன்கசன் மூலம் வெளியேறினார்.
இன்று 2-வது பயிற்சி ஆட்டம் தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இது சிட்னி மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முன்னணி வீரர்கள் சொதப்ப பும்ரா சிறப்பாக விளையாடி 55 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான கேமரூன் கிரீன் பந்து வீசினார். அப்போது பும்ரா அடித்த பந்து நேராக வந்தது. அதை கிரீன் பிடிக்க முயன்றார். பந்து கையில் சிக்காமல் வலது பக்கம் காதுக்கு மேல் தலையில் பலமாக தாக்கியது. இதனால் கிரீன் நிலைகுலைந்தார்.
ஆஸ்திரேலிய அணி மருத்துவர் பரிசோதித்தபோது, கிரீன் சற்று மயக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கன்கசன் (திடீர் தாக்குதலால் மூளையளர்ச்சி) மூலம் வெளியேறினார். கிரீன் முதல் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான கிரீன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
வில் புகோவ்ஸ்கியும் விளையாடும் நிலையில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இருவரும் தற்போது கன்கசன் மூலம் வெளியேற, ஆஸ்திரேலியா அணிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Traumatic blow to the head for Aussie Test hopeful Cameron Green while bowling. Has left the field, thankfully seemed alert/OK but will go through concussion assessment & likely checked for any possibility of facial fracture. Hope he’s OK pic.twitter.com/aPrHPAXomL
— NRL PHYSIO (@nrlphysio) December 11, 2020