ஆளு ரொம்ப 'அமைதி'... ஆனா களத்துல எறங்குனா சும்மா BEAST மோடு தான்... 'ஜெயவர்த்தனே' புகழ்ந்த இந்தியன் பவுலர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், அனைத்து விளையாட்டு போட்டிகளும் தடை செய்யப்பட்டது.
அதிலும் குறிப்பாக இந்தாண்டு நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகளும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே அந்த அணியை சேர்ந்த வீரர்களான பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'பும்ரா மிகவும் அமைதியானவர். ஆனால் களத்தில் இறங்கி விட்டால் அவர் மொத்தமாக BEAST மோடில் மாறி விடுவார். அதே போல ஹர்திக் பாண்டியாவும், போட்டியில் இறங்கும் போது மிகவும் ஆராவாரமாக செயல்படக்கூடியவர். சில திறமையான வீரர்களை எங்கள் அணி பெற்றுள்ளது. அவர்களை அணியின் சார்பில் வழி நடத்துவது என்பது மகிழ்ச்சியாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை கைப்பற்றிய பெருமை மும்பை இந்தியன்ஸ் அணி வசமுள்ளளது குறிப்பிடத்தக்கது.