'பவுலிங்'னா இப்படி இருக்கணும்... டபுள் விக்கெட் மெய்டன்!.. 'சும்மா... காட்டு காட்டுனு காட்டிட்டாரு!'.. பும்ராவின் மேஜிக் ஃபார்முலா 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் பும்ரா சிறப்பாக பந்து வீசிவில்லை. ரன்களை வாரி இறைத்தார், அதிக விக்கெட் வீழ்த்தவில்லை. லாக்டவுன் ஓய்வால் அவர் பார்ம் இழந்து விட்டார் என பலரும் கூறத் துவங்கினர்.

அவர் மீதான அந்த விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து மிரள வைத்துள்ளார் பும்ரா.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பும்ரா, தன் துல்லிய வேகத்தில் 4 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். 4 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் வீசி, 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
இதுவே அவரது ஐபிஎல் கேரியரின் சிறந்த பந்துவீச்சு. மேலும், இந்தப் போட்டியில் அவர் டபுள் விக்கெட் மெய்டன் ஓவர் வீசினார். அவர் வீசிய 16வது ஓவரில் அதுவரை அதிரடி ஆட்டம் ஆடி வந்த ஸ்டோய்னிஸ் 65 ரன்களிலும், டேனியல் சாம்ஸ் டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர்.
இதே போட்டியில் முதல் ஓவரை டபுள் விக்கெட் மெய்டனாக வீசி இருந்தார் ட்ரென்ட் போல்ட். ஐபிஎல் வரலாற்றில் இரண்டு டபுள் விக்கெட் மெய்டன் ஓவர்கள் வீசப்பட்ட முதல் போட்டி இதுதான்.
இந்த சாதனை மட்டுமின்றி, இந்த சீசனிலும் பும்ரா முன்னணியில் இருக்கிறார். 2020 ஐபிஎல் தொடரில் இதுவரை 27 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் பும்ரா. இதன் மூலம் இந்த சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இதற்கிடையே, இந்திய பந்துவீச்சாளர்களில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் புவனேஸ்வர் குமாரை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனைகள் மூலம், முதல் பாதியில் தன் பந்துவீச்சை விமர்சித்த அனைவருக்கும் கடும் பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா.
மேலும், அவரது அவது பார்ம் காரணமாக, ட்ரென்ட் போல்ட் உடன் இணைந்து ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை அச்சுறுத்தி வருகிறார் பும்ரா.

மற்ற செய்திகள்
